வாட்ஸாப்பில் (விரும்பி) நேரம் செலவிடும் நம்மால், நிகழ் உலகில் (அதே விருப்பத்துடன்) நேரம் செலவிட முடிவதில்லை.. ஏன்?
சென்ற வாரம் ராஜா சாரின் கவித்துவமான கேள்வியின் சாராம்சம் தான் மேலே உள்ள கேள்வி. என்னை நானே கேட்டுக்கொண்டதில், எனக்கு கிடைத்த பதில் இது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நான் அதிகம் வாட்ஸாப்பில் உலவ இது தான் காரணமென நினைக்கிறேன்.
காரணங்கள்--- இதோ.
நமக்கு பிடித்தவர்களையும், நம்மை பிடித்தவர்களையும் மட்டும் கொண்டு, நாம் கட்டிவைத்த ஒரு மாயக்கூடு தான் வாட்ஸாப். தொடுதிரையும், இனையமும் வாழ்க்கையில் கலந்து, புற உலகிலிருந்து விடுப்பட்டு, டெக்னாலஜியின் மாய உலகில், வாழ பழக்கமில்லாத, கைப்பேசி பரிச்சியமில்லாத, சில குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் தவிர, மற்ற அனைவரும் சேர்ந்து வாழும் கற்பனை குடும்பம் இது. விருப்பமானவர்களோடு, விரும்பிய கனத்தில், உரையாட உருவாக்கிய உன்னத மெல்லியல் இது. சமூகத்தாலும், புவியியலாலும் ஒன்று சேர இயலாத, நமக்கு பிடித்தாமனாவர்களைக் கொண்டு, நாமே கட்டிக்கொள்ள முடிந்த மனவீடு தானே இந்த வாட்ஸாப் குழுமங்கள்.
நம் பல பரினாமங்களில், ஒவ்வொன்றாய் கலந்து, நம்மை கொண்டு, நாமே செய்த நம் க்ளோனிங்குகளை, ஒவ்வொரு குழுவின் வடிவத்திற்கு ஏற்றார் போல், நம்மை நாமே வடித்து ஊற்றும், எழுத்துவகையான நாம் தானே இந்த வாட்ஸாப்பில் உரையாடும் நம் எழுத்துக்கள்.
இரண்டு காதுகளை மட்டுமே இறைவன் படைக்க, இருக்கின்ற கைப்பெசிகளில் எல்லாம் ஒவ்வொரு காதாக இறைந்து கிடக்கும் வல்லமை கொடுத்த தொழில்நுட்பம் வாட்ஸாப். நம் ஒவ்வொரு கைபேசியிலும் இருப்பது, நம் உறவுகளின், நட்புகளின் ஒவ்வொரு க்ளோனிங் அல்லவா?
அவரவர்க்கு ஒரு உலகம், அதில் அவரவருக்கு பிடித்தவர்களை, இட்டு நிரப்பிக்கொள்ள கற்பனை உலக குழுக்கள். அந்த கற்பனை உலகத்தில், நம் கற்பனைக்கு தகுந்தாற் போல் இல்லாமல், பிற நண்பர்களையும், உறவுகளையும், அவர்களுக்கு பிடித்த அவர்களாகவே பேசி, பழக வைத்த, கற்பனையும், நிஜமும் கலந்து செய்த கலவை உலகம் அல்லவா வாட்ஸாப்.
வெவ்வேறு நேரங்களில் இருந்தாலும், பேசுபவர்களையும், கேட்ப்பவர்களையும், அவரவர் விருப்பப்பட்ட நேரத்தில், பேசிக்கொள்ளவும், கேட்டுக்கொள்ளவும் என நேரம், தூரம் கடந்த, பகிர்தலின் உச்சக்கட்டம் தானே இந்த வாட்ஸாப்.
நாம் கடந்து வந்த ஒவ்வொரு கால கட்டத்தினையும், அதே கால கட்டத்தில் நிறுத்தி வைத்து, நம்மையும், நமக்கு வேண்டியவர்களையும் அதே காலத்திற்கு கடத்தி சென்று, நேற்றையும் இன்றையும் கலந்து வைத்த விசித்திர உலகம் தானே வாட்ஸாப்.
இந்த உலகத்தில் பேச, எழுத, மனதை தவிர வேறு சட்ட திட்டங்கள் இல்லை. அப்படியானால் இந்த உலகத்தில் இருப்பது தானே உண்மையான நாம்.
இதில் யாரோடு பகிர்கிறோம் என்பதும், யார்யாரிடம் எல்லாம் நாம் உண்மையில் பகிர நினைத்தோம் என்பதும், எதையெதை யார் யாரிடம் பகிர்ந்தோம் என்பதும் நம் விருப்பப்படி அமைவதால், இது தானே நம் பகிர்தல்களின் உண்மையான உரைகல்.
மனதுக்கு பிடித்ததால் 'பிடித்து பினைந்திருப்பவர்களுக்கும்', புற உலகின் கட்டாயங்களால் பினைந்து, 'பினைந்ததால் மட்டுமே பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்' இருக்கும் வேறுபாடுகளை சொல்லும் இன்றைய கைபேசி இதயம் தானே இது.
பட்டாம்பூச்சியை கைக்குள் அடக்கி வைப்பதற்கும், இரு கரம் நீட்டி, விரும்பிய பட்டாம்பூச்சிகள் எல்லாம் வந்து அமர்ந்து கொள்ளட்டும் என்பதற்கும் இருக்கும் அந்த வேறுபாடு தானே, வாட்ஸாப்பில், தொடர்புகளில் இருக்கும் நம் நண்பர்களுக்கும், தொடர்புகள் இல்லாத நம் உறவுகளுக்கும் உள்ள வேறுபாடு.
அப்படியானால், இதில் தொடர்பு கொள்பவர்கள் தானே உண்மையாக நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்களும் உறவுகளும். மற்றதெல்லாம்... சும்மா சமூகத்திற்காக போடும் வேஷம் தானே.
இனி வாட்ஸாப்பில் அதிக நேரம் இருப்பவர்களை குறைசொல்லாமல், அவர்களின் அந்த உலகத்தில் உறுப்பினராக நம்மால் முடிந்ததை செய்வோம்... உண்மையில் அவர்கள் நமக்கு முக்கியமாகப்பட்டால்.

No comments:
Post a Comment