ஞாயிறு இரவு, மணி பத்து ஐம்பது இருக்கும். மனைவியின் கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்திருந்தது. பெரும்பாலும் அதற்கு முன்பே அவள் உறங்கிவிடுவது வழக்கம். இம்முறை பேசியது என் மகள்.
Daddy..நீயா நானா தான பார்க்குறீங்க?
ம்ம்.. எப்படி கண்ணு correct-ஆ கண்டுப்பிடிச்சீங்க?
உங்களுக்கு இந்த Topic ரொம்ப பிடிச்சிருக்கு தானே?
ம்ம்... ஏன் கேட்குறீங்க? நீங்களும் பார்க்குறீங்களா? உங்களுக்கு புரியலையா?
ம்ம்.. ஆமாம் Daddy. சும்மா கொஞ்ச நேரம் என்ன பேசறாங்கன்னு பார்க்கலாம்னு பார்த்தேன். ஒண்ணும் புரியல..
சரி குட்டிம்மா..நாளைக்கு school போகணும். சீக்கிரம் படுத்து தூங்குங்க...
ok Daddy.. Good night..
ம்ம்.. Good night.. Bye...
இது எனக்கும், என் மகளுக்கும் சென்ற வாரம் ஞாயிறு இரவு நடந்த உரையாடல். இப்போது தலைப்பிற்கு வருவோம். 7 ஆம் வகுப்பு பெண்... பேசுவதை கேட்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டு கேட்டும், புரியவில்லை... அப்படியெனில் தலைப்பு கண்டிப்பாக சற்று புராதண காலத்து தலைப்பு என எண்ணி விட வேண்டாம். தலைப்பு "Need of the hour" அப்படின்னு சொல்வாங்களே, அந்த மாதிரி, நமக்கும் நம் தமிழ் சமூகத்திற்கும் மிக அவசியமான ஒன்று. தமிழர்கள் பெரும்பாலும் அடக்கி வாசிப்பவர்கள். தற்பெருமை பேசாதவர்கள், இன்னும் சொல்லப்போனால் reserved and shy type. இதை அவையடக்கம், தற்புகழ்ச்சி கூடாது என்பன போன்ற நம் கலாச்சார வளர்ப்பு முறை, நமக்குள் புதைத்து வளர்த்த ஒரு விஷயம். (சமீப காலமாக, விஷயம் என்பதற்கு பதிலாக விடையம் என்று சொல்வதைப் பார்க்கிறேன்). ஆனால், இன்றைய கால கட்டத்தில் அது ஒத்து வருமா? அவையடக்கம், தற்பெருமை கொள்ளாமை நல்ல விஷயமா? அப்படி அவையடக்கத்தோடு இருப்பது இன்று எப்படி பார்க்கப்படுகிறது? என்று ஒரு பக்கத்தில் வாதமும், மறு பக்கத்தில், தன்னை முன்னிலைப் படுத்துதல் எப்படி நன்மை கொடுக்கிறது? அதற்காக தாங்கள் மெனக்கெடுவது என்ன? ஏன்? தற்காலத்திற்கு, தன்னை முன்னிலைப் படுத்தாதவர்கள் இழப்பது என்ன? என்றும் பேச அமர்ந்திருந்தனர். நீயா நானாவை அர்த்தமுள்ளதாக்குவதில் இதைப்போன்ற தலைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் என்ன பேசினார்கள், முடிவில் முன்னிலைப்படுத்துவது தேவையா தேவையில்லையா என்ற முடிவெடுக்கும் உரிமையை நானும் உங்களுக்கே விட்டு விடுகிறேன். அதற்கான சுட்டி இங்கே:( Link to NeeyaNaana Dated: 11th Jan 2015 ).
இங்கே அந்த தலைப்பில் பேசியவர்கள் என்னை, என் சிந்தையை எப்படி மாற்றினார்கள். நான் என்னென்ன நினைத்தேன் என்பதை எழுதி வைக்க தோன்றியது.
1) நான் இதில் எந்த பக்கம்? முன்னிலை படுத்துபவனா? அடக்கி வாசிப்பவனா? உங்களையும் நீங்கள் விசாரித்துக்கொள்ளலாம்.
2) என் பேச்சில் என்னை அறியாமல் என் அந்தஸ்தை பறைச்சாற்றுகிறேனா?
3) என் நண்பர்களோ அல்ல மற்றவர்களோ, என் முன்னிலைப்படுத்தலால் காயமடைகிறார்களா? Am I pushing them to an Inferiority complex?
4) என் பேச்சில் மற்றவர்களை மட்டம் தட்டுகிறேனா?
5) மற்றவர்கள் கருத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறேனா? Inputs ஐ accept பண்ணுவது இல்லையா?
6) எதையேனும் எப்போதும் ஒப்பிட்டுக்கொண்டே, அது சிறந்தது, இது அது போல் இல்லை என்று வாதிடுகிறேனா?
7) வலைதளங்களில் என்னை, என் வாழ்வியலை மற்றவர் கண்டு பிடிக்கும் படி, தகவலோ, புகைப்படமோ இட்டுக்கொண்டே இருக்கிறேனா? I am in Mumbai, I am in KFC, நாங்க எல்லாம் பணக்காரங்க..என்பது போல் சித்தரித்துக் கொள்கிறேனா?
8) மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, எனக்கு உபயோகமற்ற பொருளை வாங்கி வைத்து show காட்டுகிறேனா?
9) செய்யாததை செய்ததாகவோ, மற்றவருக்குரிய பாராட்டை நான் பெற ஏதும் செய்கிறேனா?
10) Show Stealer ஆக இருக்க வேண்டும் என்று பிரயத்தனப்படுகிறேனா?
11) கவன ஈர்ப்புக்காக ஏதேனும் மெனக்கடுகின்றேனா?
12) தெரியவில்லை, முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறேனா?
13) என்னை சார்ந்தவர்களை, அவர்கள் திறமைக்கு மீறி தூக்கி வைத்து பேசுகிறேனா?
14) அறிவாளிதனத்தை காட்டிக்கொள்ள, திரைப்படம், புத்தகம் இவற்றை, அவற்றின் அளவு மீறி பாராட்டுகிறேனா?
15) பெரியவர்களின் பழக்கம் உள்ளதென காட்டிக் கொள்கிறேனா?
16) உண்மை தெரியாமல் தெரிந்தது போல் காட்டிக் கொள்கிறேனா?
17) அடங்காமலிருப்பது, கெத்து காட்டுவது போல் நடித்து பேர் சம்பாதிக்கிறேனா?
18) Honey Tongue - மற்றவர் பேச்சில் இருப்பதை எடுத்து, அவர்களையே மடக்குவது, அதைப்பற்றிய முழு விவரம் அறியாமல் வாதிடுவது..
19) நம் சுயம் வெளிப்பட்டு விடுமோ என்ற insecurity யாரிடத்திலாவது இருக்கிறதா?
20) முன்னிலைப்படுத்த முற்பட்டு, மொக்கை வாங்கிய்ருக்கிறேனா?
இந்த மேல் சொன்ன கேள்விகளுக்கு, அலுவலகம் மற்றும் அவ்வளவாக பரிச்சியமில்லாதவரிடத்தில் நீங்கள் எத்தனை கேள்விகளுக்கு ஆம் என பதில் அளிக்கிறீகள் என்பதை தனியே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். நெருங்கிய நண்பர் வட்டம், குடும்பம் இவர்க்ளிடத்தில், இதே கேள்விகளுக்கு எத்தனை கேள்விகளுக்கு ஆம் என பதில் ஆளிக்கிறீர்கள் என்பதையும் மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த இடத்தில் இன்னும் எப்படி மாற வேண்டும் என்பதை உங்களுக்கு உங்கள் மனசு வெளிக்காட்டும். எனக்கு பட்டவர்த்தனமாக புரிகிறது. நான் வீட்ல எலி வெளியில புலி... அல்லது புலி போல் பாவிக்கும், முன்னிலைப்படுத்தும் சராசரி மனிதன். Survival-க்காக என மனசு சம்மதம் சொன்னாலும், சில பல தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கிறது இந்த வாரம் நீயா நானா.
சரி. நீங்கள் அலுவலகத்தில் சந்தோஷமாக பேசி பழகி, உறவுகளுடன் கலகலவென இருந்தாலும், உங்களை அறியாமல், உங்களின் பாரம்பரிய குனத்தால், அடக்கமாக, simple and low profile maintain ப்ண்ணுவதாக நினைத்து, உங்கள் அலுவலகத்தில், உங்கள் குடும்பத்தில் reserved-ஆக பார்க்கப் படுகிறீகளா? ஒரு சின்ன அலசல்.
1) எப்போது கடைசியாக உங்களோடு பணி புரிபவரை அல்லது குடும்ப உறவை, அவர்களின் செய்கைக்காக உயர்த்தி பேசினீர்கள்.? கடந்த ஒரு வாரத்திற்குள் இருக்குமா?
2) அலுவலக நட்புக்கூட்டமோ, குடும்ப விழாவோ, நீங்களாக பதிவு செய்த Status, புகைப்படம் எப்போது? ஒரு மாதத்திற்குள் இருக்குமா?
3) நீங்கள் vaolunteerஆக எடுத்துக் கட்டி செய்த விஷயம் என்ன? எப்போது? தேடி சென்று உதவியது உண்டா?
4) நீங்கள் புதிதாக கற்றுக்கொண்ட விஷயத்தை, நீங்கள் நடைமுறை படுத்திப்பார்த்து பலன் அடைந்ததை யாரிடமாவது பகிர்ந்திருக்கிறீர்களா?
5) தற்போது உபயோகமில்லாத ஒன்றை, தெரிந்துக்கொள்ளும் நோக்கத்திற்காக, தேடி சென்று அறிந்து கொண்டிருக்கிறீகளா?
6) உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காத போதும், சுற்றியிருப்பவருக்காக ஏதேனும் உங்களை மாற்றிக்கொண்டிருக்கிறீகளா?
7) உங்களுக்கு சேர வேண்டிய பாராட்டு என்று உங்கள் மனது சொல்ல, அந்த instinctஐ மதித்து, பாராட்டியவரிடத்தில் உங்கள் நிலையை விளக்கியிருக்கிறீகளா?
8) உங்கள் காத(லி/லன்), உங்கள் மனைவி, உங்கள் தாய், உங்களின் உடன்பிறப்பு யாரிடமாவது கடந்த ஒரு மாதத்திற்குள் I love you (Dear) என்று explicit ஆக சொல்லியிருக்கிறீகளா?
மேல் சொன்ன 8-ல் நான்கிற்கு மேல் இல்லை என பதில் வந்தால், உங்கள் தியாகம், உங்கள் அன்பு, உங்கள் காதல், உங்கள் திறமை சரி வர புரிந்துக்கொள்ளப்படவில்லை என்று உணருங்கள். இன்னும் கொஞ்சம் உங்கள் உணர்வை வெளிக்காட்டுங்கள். இல்லையெனில் உங்கள் திறமையை புரிந்துக்கொள்ளாமல், உங்களுக்கான வாய்ப்பு வேறு யாருக்கோ போகக்கூடும், உங்களின் அன்பு புரிந்துக்கொள்ளாமல் போகக்கூடும். உங்களை அவர்களின் சந்தோஷ நேரத்தில் மறந்து விடக்கூடும். உங்களை அவர்களின் ஆட்டத்தில் இருந்து விலகி வைத்து விடக்கூடும். அராத்து சொன்னது போல், அவர்களென்ன காதலியா சொல்லாமலே புரிந்து கொள்ள. இப்போதைய கால கட்டத்தில், காதலிகளே explicit ஆக சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம், இதைப்போல் அடக்கி வாசிப்பவர்கள், பெரும்பாலும் தங்களுக்கென எதையும் செய்து கொள்வதில்லை. அது முற்றிலும் தவறு. உங்கள் வாழ்வை நீங்கள் வாழுங்கள். உங்கள் மனைவி அல்லது கணவன் வாழ்வை அவர் வாழட்டும். உங்கள் குடும்பத்திற்காக உங்கள் உறவுகளுக்காக நீங்கள் தியாகம் எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் தியாகத்தால் தான் அடுத்தவர் சந்தோஷமாக இருக்கிறார் என்ற நினைப்பே தவறானது. உங்களுக்கென்று ஒரு தனி உலகம் இருக்கட்டும். அதில் உங்களை முன்னிலைப்படுத்தி, உங்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டியவைகளைப் பட்டியலிட்டு, அதை நோக்கி பயனப்படுங்கள். அப்போது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக தோன்றும். இல்லையேல், இன்றில்லை என்றாலும், கூடிய விரைவில், உங்கள் அன்பு தோற்றுப்போனதாக நீங்கள் கருதும் நேரத்தில், வாழ்வின் மீது சலிப்பு வரக்கூடும். தன்னை மிஞ்சியது தானமும் தர்மமும் அல்ல. தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மும். வாழ்வும் அப்படி தான். முதலில் உங்கள் சந்தோஷம், பிறகு உங்களை சார்ந்த்வர்கள். அனைவரும் கொண்டாடும் போது உங்களின் மீது பரிதாபப்பட செய்யும் தியாகங்கள், தியாகம் அல்ல.. அது negative way of Branding. உங்களுக்காக விட்டுக்கொடுத்து நான் எப்படி இருக்கிறேன் பார் என்பது. அது முற்றிலும் தவறு. எனவே உங்களுக்கான சந்தோஷங்கள் என்ன? உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி கொண்டாட நினைக்கிறீர்கள்?, உங்களுக்கு எப்போது ஓய்வு தேவை, உங்களுக்கென்ன லட்சியம், குறிக்கோள் ஏதும் இருக்கிறதா? உங்கள் ஆசை என்னென்ன? எல்லாவற்றையும் பகிருங்கள். கேட்டாலே எளிதில் கிடைக்காத உலகம். இதில் தானாக கனியும், அவர்களாக புரிந்து கொள்வார்கள் என்று காத்திருப்பது முட்டாள்தனம்.
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட வேண்டாம். ஆனால், உங்களுடையதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் அன்பு, உங்கள் திறமை, உங்கள் உழைப்பு, உங்கள் இரத்தம். உங்கள் உரிமை. புரிந்து கொண்டு செயல்படுத்தினால், வாழ்க்கை இனிதாகும். வாழலாம். நமக்காகவும்.