வரலாறு பாடம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வகுப்பறையை கவனிக்காமல், தூரத்தில் நின்று பார்த்தாலே தெரியும். அசோகராய், இராஜராஜ சோழனாய், ஜான்சி ராணியாய், அரியணையில் கம்பீரமாய் வீற்றுருப்பதைப் போல், நாற்காலி தவிர்த்து, மேசை மேல் அமர்ந்து, மிடுக்குடன் பிரபா மேடம் வரலாறு பாடம் நடத்தும் அழகே தனி. எத்தனை திரைப்படங்கள் பார்த்தாலும், கலிங்கத்து போரும், பாணிப்பட் போரும், எங்கள் கற்பனையில் விரிந்தது போல் இன்னமும் எடுக்க முடியவில்லை. உபயம்: பிரபா மேடம் தான்.
அரசியலில் ஆர்வம் வந்ததும், நாளிதழ் படிக்கும் பழக்கமும், குறிப்பாக மந்திரிகளின் இலகா, தொகுதி நிலவரம் பற்றி குறிப்பு எடுப்பது, அப்போதைய சேலம் மேயர் சூடாமணி என்பதை இன்றும் நினைவில் வைத்திருப்பது எல்லாமே பிரபா மேடமின் தூன்டுதல் தான். எங்களுக்கு கிடைத்த எல்லா நல்ல ஆசிரியைகளுக்கும் கூட பிரபா மேடமே காரணம் எனலாம். தலைமை ஆசிரியராக இருந்து, ஒவ்வொரு ஆசிரியர்களையும்,மாதிரி வகுப்பு எடுக்க சொல்லி, எங்களின் கருத்துகளை கேட்டு, அதன்பின் அவர்களை தேர்ந்தெடுத்ததும் பிரபா மேடம் தான்.படிப்பில் மட்டுமல்லாது, நாடகம், பாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும், எங்கள் பள்ளி சிறந்து விளங்கியதற்கும், பிரபா மேடத்தின் தலைமை பொறுப்பு மிக முக்கியமான காரியம்.
அதிலும், எங்கள் வகுப்புக்கும், பிரபா மேடத்திற்கும் ஒரு சிறப்பு தொடர்பு இருந்தது. எட்டாம் வகுப்பு வரை, எங்களுக்கு வரலாறு நடத்தியது அவர் என்ற சிறப்பினை தாண்டி, அவரின் மகள் மருதவாணியும் எங்களோடே படித்தது தான். வாணிக்கு அது பிடித்ததா, இல்லையா என தெரியாது. ஏனெனில், மகளுக்கான எந்த சலுகைகளையும் அவர் தந்ததுமில்லை, வாணியும் எதிர்பார்த்ததாக தெரியவில்லை. சொல்லப்போனால், வாணியோடு சில ரகசியங்கள் பரிமாறப்படாமலே இருக்கும். வீட்டிற்கு போனதும் எங்கே சொல்லி விடுவாளோ என்று, அந்த வயதிற்கான பயம் இருந்த படியே இருக்கும். ஆனால், இன்றுவரை எங்களின் நல்ல தோழியாய், சமயத்தில், எங்கள் சார்பாக அம்மாவிடம் (பிரபா மேடமிடம்) சலுகைகள் கேட்டு, அதற்கும் திட்டு வாங்கும் செல்ல தோழியாகவும் தான் வாணி இருந்தாள்.
வேலைக்கு செல்லும் பெண்களின் நிலையை, வீடு, அலுவலகம் இரண்டிலும் நல்ல கவனம் செலுத்தி, திறம்பட ஆளுமையால், இரண்டிலும் சிறப்பாக விளங்க முடியும் என்பதற்கும் பிரபா மேடமே சிறந்த உதாரனமாக இருந்தார்கள். தவறு செய்தவர்களை வரிசையில் நிற்க வைத்து, அடி ஸ்கேலின் நுனியில் லேஸாக பிடித்து, கையை மெல்ல உயர்த்தி, பொளேரென உள்ளங்கையில் அடி விழும் போது, அந்த தவறை மீண்டும் நினைக்கவே முடியாதபடிக்கு அடிப்பார். இந்த "Elephant shot"க்கு வாணியும் விதிவிளக்கல்ல. ஆசிரியராக அடி பின்னிவிட்டு, அம்மாவாக கண் கலங்கிய நெகிழ்ச்சியான தருணங்களும் உண்டு. அந்நியன் படத்தின், Multi Person Disorderஐ, எங்கள் வகுப்பு அப்போதே சந்தித்திருந்தது.
என்னை வியப்பில் ஆழ்த்துவதெல்லாம், Google, Internet என எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே, எப்படி அவ்வளவு தகவல்களை, அவ்வளவு துள்ளியமாக அவரால் சேகரிக்க முடிந்ததது என்பதும், அந்த பள்ளியை பாடத்தில் மட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் முன்னிழுத்து செல்ல முடிந்தது என்பதும் தான். ஏற்காடில் கைப்பந்து போட்டி, சேலத்தில் ஹாக்கி போட்டி, திருப்பராய்துரையில் கபடி மற்றும் கோ கோ போட்டி, மாநில அளவில் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் போட்டி மிக குறைவு, வன உயிர் பாதுகாப்பு குறித்து நாட்டிய நாடகம் ஏதும் இதுவரை வென்றதில்லை என்பன போன்ற வெற்றிக்கான எண்ணற்ற சின்னச்சின்ன தகவல்கள். எல்லாம் எப்படி சேகரித்து இருப்பார். எவ்வளவு பெரிய நெட்வொர்க், என்ன ஒரு communication. எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே...
இப்போது, நாற்பது வயதான மாணவர்கள் நாங்கள் எல்லாம், முகநூலில் இருப்பதைந்து ஆண்டுகளுக்கு பின், ஒவ்வொருவராக பிடித்தோம். மருத்துவர், மேலாளர், பொறியாளர் என ஒவ்வொருவரும், நல்ல நிலையில், உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தோம். நிறைய பேர் முகநூலில் கணக்கே வைத்தில்லை. ஒரு சிலருக்கு ஸ்மார்ட் போன் உபயோக படுத்தக்கூட தெரியவில்லை. Generation Gap. ஒரு வழியாக ஒரு குழு அமைத்து, வாணியயையும் அதில் சேர்த்தோம். அம்மாவை (பிரபா மேடம்) பற்றி விசாரித்த போது, பிரபா மேடத்தின் முகநூலிற்கும், வாட்ஸப்பிற்கும் லிங்க் அனுப்பினார். பிரபா மேடம் எங்களை பள்ளிக்கென ஒரு ட்ரஸ்ட் அமைப்பது குறித்தும், அதன் வழியே எங்களாலான உதவிகளை பள்ளிக்கு அளிக்குமாரும் அறிவுறை கூறினார். அதற்கான வங்கி கணக்கு துவக்குவது குறித்து தகவல்களில் உதவுவதாகவும் முகநூல் மெஸஞ்சரில் தகவல் அனுப்பியிருந்தார்.
பள்ளி, அதன் நலன், அதற்கான up to date தகவல். மாணவர்களைக் கொண்டும், தன்னாலான முயற்சிகள் செய்தும், ஒவ்வொருவரின் சக்தியை ஒரு நல்ல செயலுக்காய், நல்லதொரு வெற்றிக்காய் வழி நடத்தி, வெற்றி கோப்பையயை தூக்கி விழா நடத்தும் போது, உலக கோப்பை வென்ற Dhoniயாய், பின்னால் நின்று கைத்தட்டி மகிழ்வார். அது தான் பிரபா மேடம். எங்கள் சரித்திர நாயகி.