ஒவ்வொரு கால கட்டத்திலும், நம்மை ஏதோ ஒன்று வசியப்படுத்துகிறது. ஏதோ ஒன்றின் மேல் அதிக நாட்டம் கொள்கிறோம். ஆனால், ஏதோ சிலவற்றின் மேல் மட்டும், எப்போதும் நம் பிரியம் குறைவதே இல்லை. ரயில் பயணம், பட்டாம்பூச்சி, மல்லிகை பூ, மழைச்சாரல், மண் வாசம் என்று ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு பட்டியல். அந்த பட்டியலில் எங்கள் பள்ளியின் பெரும்பான்மையான மாணவர்களின் பட்டியலின் இன்றளவும் ( 25 ஆண்டுகளுக்கு பிறகும்) நீங்காத இடம் பிடித்திருப்பது வரலாறு (வரலாறு முக்கியம் அமைச்சரே). இன்றளவும் வரலாற்று திரைப்படங்களை தேடி தேடி பார்க்க வைப்பதும், வரலாறு புத்துகங்களை வாசிக்க வைப்பதும் என எங்களை வரலாறு வசீகரக்க செய்ததன் முதல் படி, எங்கள் வரலாறு வகுப்பறை தான். இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் ( சரித்திர நாயகி ), இன்று எங்கள் வரலாறு ஆசிரியை பிரபா மேடமின் பிறந்த நாள்.
மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் சுஜாதா... மதன் வரலாறு ஆசிரியராக இருந்திருந்தால், எல்லா மாணவர்களும் சரித்திர பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருப்பார்கள் என்று எழுதியிருந்தார். அதை படிக்கும் போது, பிரபா மேடம் எழுதியிருந்தால், வந்தார்கள், வென்றார்கள் போல பல நல்ல சரித்திர புத்தகம் நமக்கு கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. பாகுபலி திரைப்படம் பார்த்து மெச்சிய மக்களிடையே, பிரபா மேடம் பாடம் நடத்தும் போது, எங்களின் மனதில் ஓடிய visual-களை ஈடு செய்ய இயலவில்லை என்றே தோன்றுகிறது. சாண்டில்யனோ, கல்கியோ, போர் தந்திரங்களை விவரிக்கும் போதும், வியூகங்களை விளக்கும் போதும், மனதில் படமாக பார்க்க எங்களை அன்றே அவர் பழக்கியிருந்தார்.
ஒவ்வொரு போர் வியூகங்களும் இன்றும் ஞாபகம் இருக்கிறது. போர் விதிகளை மீறி, கொரில்லா தாக்குதல் நடத்தி வென்ற முகலாய கதைகளையும், யானையின் மென்மையான பாதங்களுக்கு முள் உருண்டை அனுப்பி போர்களை வென்றதும், கலிங்கம் முடிந்து, புத்த பிக்ஷுவாக மாறியதும், இன்றளவும் எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. "இந்திரபிரஸ்தா" என்று டில்லியை அவர் கூறியதும், அங்கிருந்து கலவாடிய பொக்கிஷங்களும், கோகிணூர் வைரம், peacock throne, என ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
வரலாற்றில் மட்டுமல்லாமல், நிர்வாகத் திறமையும், மாணவ மேம்பாடும், குடும்பத்தை பராமரிப்பதும் என அனைத்திலும் அவரால் எப்படி சிறப்பாக விளங்க முடிந்தது என்று இன்றும் வியப்பாகவே உள்ளது. இப்போது பக்தி மார்கத்தில், ஈசனை வழிப்படுவதிலும், அவன் புகழ் பரப்புவதிலும் அதிக ஆர்வம் கொள்வதாகவும் தெரிகிறது. அவர் போற்றும் அந்த சிவன், அவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும் தர வேண்டியும், அவர் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற அவருக்கு நேரத்தையும், சக்தியையும் தர வேண்டியும் பிரார்தித்து, எங்கள் அனைவரின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கிறேன். எங்களை பொருத்தவரை, எங்களின் அனைவரின் வரலாற்றிலும், தனக்கென ஒரு இடம் பிடித்த அவர், ஒரு வாழும் வரலாறு தான்.
மதனின் வந்தார்கள் வென்றார்கள்- அத்தியாயம் 3. பாடம் கேட்ட உங்கள் பழைய நினைவுகளை கிளர...சற்று பெரிய file தான். But worth downloading. Once again... Happy Birthday Prabha mam.

No comments:
Post a Comment